டீ, காபி விலையை திடீரென உயர்த்திய வியாபாரிகள்... இதோ விலை பட்டியல்!

டீ
டீ
Published on

சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12இல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15இல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்

பால் - ரூ.15

லெமன் டீ - ரூ.15

காபி - ரூ.20

ஸ்பெஷல் டீ - ரூ.20

ராகி மால்ட் - ரூ.20

சுக்கு காபி - ரூ.20

பூஸ்ட் - ரூ.25

ஹார்லிக்ஸ் - ரூ.25

பார்சல்

கப் டீ - ரூ.45

கப்-பால் - ரூ.45

கப் காபி - ரூ.60

ஸ்பெஷல் கப் டீ - ரூ.60

ராகி மால்ட் - ரூ.60

சுக்கு காபி - ரூ.60

பூஸ்ட் - ரூ.70

ஹார்லிக்ஸ் கப் - ரூ.70

ஸ்னாக்ஸ்

போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)

logo
Andhimazhai
www.andhimazhai.com