கமலின் புது முயற்சி...பயிற்சியில் கலந்துக்குங்க!

கமலின் புது முயற்சி...பயிற்சியில் கலந்துக்குங்க!

Published on

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது.

ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார்.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com