(வலமிருந்து இடம்) திருச்சி சூர்யா, கல்யாணராமன்
(வலமிருந்து இடம்) திருச்சி சூர்யா, கல்யாணராமன்

பாஜக: கட்டங்கட்டப்பட்ட கல்யாணராமன், திருச்சி சூர்யா...!

தமிழக பா.ஜ.க.விலிருந்து திருச்சி சூர்யாவும், கல்யாணராமனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து தமிழக பா.ஜ.க.வில் சலசலப்புக்குப் பஞ்சமில்லை.

இந்த நிலையில், பாஜகவின் மைக்குழு கூட்டம் நேற்று கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூடத்தில், திருச்சி சூர்யாவையும் கல்யாணராமனை சஸ்பெண்ட் செய்யக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்பு நேற்றிரவு பத்து மணிக்கு மேல்தான் வெளியானது.

அதன்படி, தமிழக பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியிலிருந்து ஒருவருட காலத்திற்கு நீக்கப்படுவதாகவும், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது.

இதன் மூலம், திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com