விஜய்க்கு ஆதரவா?- தினகரன் மறுப்பு

டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி
Published on

விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சியமைக்க அ.ம.மு.க. ஆதரவு அளிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மறுத்துள்ளார். 

முன்னதாக, த.வெ.க. ஆட்சியமைக்க தினகரனின் அ.ம.மு.க.வின் ஒரே உறுப்பினர் ஆதரவு தருவதாக காலையில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதையடுத்து தினகரன் இன்று மாலையில் விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. இருப்பதால், அ.தி.மு.க.வுடன் தொடர்கிறது என்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் அ.ம.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் காமராஜும் தங்கியுள்ளார் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com