எந்தக் கூட்டணியும் நியாயம்தான் - தினகரன் சொன்னது என்ன?

டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரன்
Published on

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் அது சரிதான் என்று நியாயப்படுத்தினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இதைக் கூறினார்.

அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் ஒன்றுசேர்க்கும் என்றவர், அண்ணாவும் இராஜாஜியும் ஒரு காலத்தில் ஒன்றுசேரவில்லையா எனக் கேட்டார்.

தி.மு.க. கூட்டணியில் வென்ற கட்சிகளை தன் பக்கம் இழுத்து அல்லது அவர்கள் போய் ஆதரவு கொடுத்து அமைச்சர் பதவியில் த.வெ.க. கூட்டணியில் இருப்பது நியாயம் என்றால், எந்தக் கூட்டணியும் நியாயம்தான் என்று தினகரன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com