நயினார் மீது தினகரன் பாய்ச்சல், அண்ணாமலைக்குப் பாராட்டு!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறும்முன் என்னிடம் கேட்டிருந்தால் என நயினார் கூறியது ஆணவமாகத் தெரிந்தது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு விமர்சித்த அவர், பா.ஜ.க. மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தவரை, கூட்டணியை சிறப்பாகக் கையாண்டார்; நயினார் நாகேந்திரன் அவ்வாறு இல்லை என்றும் கூறினார். 

மேலும் அவர் கூறியது: 

” அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமித்ஷா தொடர்ந்து முயற்சி எடுத்துவருகிறார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என அமித் ஷா அறிவித்தார்; அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்றும் கூறினார்.

அந்தக் கட்சியில் இருக்கும் ஒருவரைத்தான், அவரைச் சேர்ந்த சிலரை எதிர்த்துதான் நாங்கள் எங்கள் இயக்கத்தை ஆரம்பித்தோம்.

ஆணவம், அகங்காரம் மேலேறி, துரோகம் தலைவிரித்தாடுகிறது; ஊர் ஊராக சென்று குறை கூறும் போது அமைதியாக இருக்க முடியாது.

டெல்லியிலிருந்து வரும் தலைவர்களிடம் விளம்பரத்திற்காக பொக்கே கொடுப்பதை நாங்கள் விரும்புவதில்லை.

எங்களை சிறிய கட்சி என நயினார் நினைத்திருக்கலாம்; அதனால், எங்களைப் பற்றி குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

தொண்டர்கள்தான் எங்களுக்கு முக்கியம்; அதனால்தான் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்தோம்.

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இனியும் விழித்துக்கொள்ளவில்லை என்றால், ஆட்சிக்கு வருவது அவர்களுக்கு கனவாகவே போய்விடும்.” என்று தினகரன் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com