தமிழ் நாடு

தவெக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் விஜய்யை கட்சியின் சின்னமான ‘விசில்’ ஊதி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்தும் மாநில, மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்ட மேடைக்கு விஜய் வருகை தந்த போது, விசில் ஊதி வரவேற்பு கொடுத்தனர் நிர்வாகிகள். தவெகவுக்கு 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதால் விசில் ஊதி விஜய்யை தவெக நிர்வாகிகள் வரவேற்றனர்.