காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட விஜய்... 5 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம்?

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவைக் கேட்டிருப்பதாக காங்கிரஸின் அகில இந்திய அமைப்புப் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கூறி உள்ளார்.

“தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமையவும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும் வல்ல அரசு அமையவும் மக்கள் வாக்களித்துள்ளனர் என காங்கிரஸ் நம்புகிறது, பாஜகவும் அதன் முகமூடிகளும் தமிழக அரசை எந்தவிதத்திலும் ஆட்டுவிக்கக் கூடாது என உ றுதியாய் உள்ளோம்.

ஆட்சிக்கு ஆதரவு கேட்கும் விஜயின் கோரிக்கையைப் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்குமாறு தமிழக காங்கிரஸ் கட்சிக் குழுவை பணித்துள்ளோம். தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்ட மாநில உணர்வை மதிக்கும் விதத்தில் அம்முடிவு அமையும்” என்றார் அவர்.

இதன் மூலம் காங்கிரஸ், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் என்பது உறுதியாகி உள்ளது எனக் கொள்ளலாம்! ஏற்கெனவே வெற்றிக்குப் பின்னர் ராகுல் காந்தி தொலைபேசி மூலம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்!

5 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் உண்டா வெளியிலிருந்து ஆதரவா என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்தைக் கிளப்பி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com