பதவிவிலகிய அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.களே த.வெ.க. வேட்பாளர்கள்!

பதவிவிலகிய அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.களே த.வெ.க. வேட்பாளர்கள்!
Published on

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளிலும் முன்னர் எம்.எல்.ஏ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையே த.வெ.க. வேட்பாளர்களாக விஜய் அறிவித்துள்ளார். 

தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இவர்களில், மரகதம் த.வெ.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும், சத்தியபாமா திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் பதவியில் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் பழைய வேட்பாளர்களையே மீண்டும் நிறுத்துவதா வேண்டாமா என்பது குறித்து த.வெ.க.வில் இரண்டுவிதமான கருத்துகள் நிலவிவந்தன. தேர்ந்தெடுத்த தங்களை மதிக்காமல், இருவரும் தங்கள் சுயவிருபத்துக்குக் கட்சிமாறிவிட்டார்கள் என வாக்காளர்களிடம் எதிர்ப்பு இருக்கும் என்று கருதப்பட்டது.

ஆனாலும், விஜய் முதலமைச்சர் எனும் பிம்பத்தை வைத்து எப்படியாவது வெற்றிபெற்றுவிடலாம் என த.வெ.க. நிர்வாகிகள் விஜய்யிடம் கூறியுள்ளனர்.

இறுதியாக, பதவிவிலகிய எம்.எல்.ஏ.களையே த.வெ.க.வின் சார்பில் போட்டியிடவைப்பது என விஜய் முடிவுக்கு வந்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com