சிதம்பரம் தொகுதி த.வெ.க. வேட்பு மனு தள்ளுபடி!

சிதம்பரம் தொகுதி த.வெ.க. வேட்பு மனு தள்ளுபடி!
Published on: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் பாரியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  

எழுத்துப் பிழை காரணமாகவும் மனுவை சரியாக நிரப்பாததாலும் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் பாரியின் கோரிக்கையை ஏற்று கடைசியாக அவரின் மனு மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனாலும் அதிலும் அவரது மனு தேறவில்லை.

அதற்குப் பதிலாக மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்த அவருடைய தந்தை நெடுஞ்செழியனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

த.வெ.க. தரப்பில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து சிக்கல் தீர்ந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com