நாளை மறுநாள் த.வெ.க. மாநாடு பூஜை!

Vijay
விஜய்
Published on: 

நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில்தான் கட்சி கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.பூமி பூஜைக்குப் பின் மாநாட்டு திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com