த.வெ.க. அலுவலகத்தின் மீது தீ வைப்பு!

த.வெ.க. அலுவலகத்தின் மீது தீ வைப்பு
த.வெ.க. அலுவலகத்தின் மீது தீ வைப்பு
Published on

த.வெ.க. வேட்பாளர் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாதவர்கள் தீ வைத்ததுடன், அங்கிருந்த பேனர்களையும் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். 

திருச்சி, ஸ்ரீரங்கம் பேட்டைவாய்த்தலை அருகில் த.வெ.க. வேட்பாளர் இரமேசின் வேட்பாளர் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் அங்கு சென்ற அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். 

காரணம், அந்தத் தற்காலிக அலுவலகத்தின் மீது தீ வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனரையும் கிழித்து சேதப்படுத்தியிருந்தனர். 

கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

பைக்கில் வந்த இரண்டு பேர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com