இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் த.வெ.க.- 5 தீர்மானங்கள் என்னென்ன?

இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் த.வெ.க. அமைச்சர்கள்
இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் த.வெ.க. அமைச்சர்கள்
Published on: 

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தமிழ்நாடு மாநில அளவிலான தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமைவகித்தார். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:

” * இந்தியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினை இந்தியா கூட்டணி கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்த நல்ல அரசியல் முடிவை எடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.

* சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற வகையிலும், தகுதியான 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கின்ற வகையிலும் செயல்படுகின்ற இந்திய தேர்தல் ஆணையத்தையும், அதனுடைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்களையும், அவரை ஒரு கருவியாக பயன்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலத்தை அரங்கேற்றி வரும் மோடி - அமித்ஷா கூட்டணியையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

* இந்த ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையில் தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ‘ஜனநாயகத்தைக் காப்போம்” (Save Democracy) என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்கிறது.

* இறுதியாக சென்னை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதில் இந்தியா கூட்டணியினுடைய தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

* இந்திய ஜனநாயகத்தை பேரழிவிலிருந்து பாதுகாக்கும் இந்த போராட்ட நடவடிக்கைகளுக்கு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேராதரவைத் தர வேண்டும்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com