நடிகர் விஜய்
நடிகர் விஜய்

ஜாயின் பண்ணுங்க ப்ளீஸ்… த.வெ. கட்சியில் சேர விஜய் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கட்சியில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணி உருவாக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியதோடு, முதல் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விஜய் பேசியதாவது:

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, உங்களுக்கு பிடித்திருந்தால் ஜாயிண்ட் பண்ணுங்க ப்ளீஸ்” என்று விஜய் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com