தமிழ் நாடு
விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக த.வெ.க. தரப்பிலிருந்து தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாக அவர் இன்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சித் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி ஆகியோரை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், அமைச்சர்களின் எண்ணிக்கை, எந்தெந்தத் துறைகள் என்பது பற்றி பரஸ்பரம் பேசிவருவதாகக் கூறினார்.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய்யிடம் தங்கள் நிலையைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் சோடங்கர் தெரிவித்தார்.