கட்சி நடக்கிறதா, கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை என எடப்பாடி பழனிசாமியைக் கலாய்த்து விட்டிருக்கிறது, விஜய் கட்சியின் ஐடி விங்.
சேலத்தில் இன்று ஊடகத்தினரிடம் பேசிய பழனிசாமி, விஜய்யைப் பற்றி காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதிலடியாக த.வெ.க. தரப்பில் இப்படியொரு எதிர்வினை வந்திருக்கிறது.
”தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.
கொடநாடு கொலை வழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடி.
கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்.” என்று த.வெ.க. ஐடி விங் கிண்டல் அடித்துள்ளது.