தமிழ் நாடு

திறந்தவெளி திடலில் நடைபெறும் கூட்டத்திற்கு முதல்முறையாக பந்தல் அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்
வேலூர் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் 4,900 பேர் மட்டுமே பங்கேற்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த 4,900 பேருக்கும் கியூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் நிகழ்ச்சிகளில் முதல் முறையாக இந்த 33 ஏக்கர் திடலில் தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் 900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.