29ஆம் தேதி த.வெ.க. வேட்பாளர் பட்டியல்!

tvk vijay
நடிகர் விஜய்
Published on

த.வெ.க.வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நாளைமறுநாள் 29ஆம் தேதி வெளியிடுகிறார்.

முன்னதாக, இன்று சென்னையில் அப்பட்டியலை வெளியிடுவதாக இருந்ததில் அனுமதி சிக்கலாகி, நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இக்கூட்டத்தில், விஜய் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.” என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.

இ‌ந்‌‌த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை; தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும் என்றும் அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com