தமிழ் நாடு
ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் அர்லேகரை த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் சந்தித்தார்.
முற்பகல் 11.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின்போது நடைபெற்ற உரையாடல் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆனால் ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என ஆளுநர் கேட்டதாகவும் விஜய் அளித்த விளக்கத்தை அடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தன் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்திவருகிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தன் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.