ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!
Published on

த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோரினார். 

முன்னதாக, இன்று மதியம் இதையொட்டி கேரளத்திலிருந்து ஆளுநர் அர்லேக்கர் சென்னைக்கு வந்திருந்தார்.

காலையில், காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரும் விஜய்யிடம் நேரில் ஆதரவு தெரிவித்து, அதற்கான கடிதத்தையும் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 107 பேர், காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரின் ஆதரவு உள்ள கடிதத்தை ஆளுநரிடம் விஜய் அளித்தார்.

பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய இச்சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

நாளை விஜய்யின் அமைச்சரவை பதவியேற்கும் விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com