தமிழ் நாடு
சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்கள் வேறெங்கும் சென்றுவிடாமல் பனையூருக்கு வரும்படி அக்கட்சியின் தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வரும் 4ஆம் தேதி வரவுள்ள நிலையில், சென்னையை அடுத்த பனையூரில் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களுடன் அவர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனையைத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த உரையாடல் நீடித்தது.
கூட்டத்தில் பேசிய விஜய், வெற்றிபெற்றதும் இங்கு வந்துவிடுங்கள்; உங்களுக்காகக் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
” தேர்தலில் நமக்கு சாதகமான முடிவுதான் வரும்” என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
விஜய் உட்பட 232 தமிழக வேட்பாளர்கள், 30 புதுச்சேரி வேட்பாளர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.