505 வாக்குறுதிகள், ஓட்டுத் திருட்டு- அரியலூரில் விஜய் 2 தாக்குதல்கள்!

505 வாக்குறுதிகள், ஓட்டுத் திருட்டு- அரியலூரில் விஜய் 2 தாக்குதல்கள்!
Published on

திருச்சியில் இன்று மாலையில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய த.வெ.க. தலைவர் விஜய், அடுத்து அரியலூரில் கூட்டத்தில் பேசினார்.

மேடையில் அல்லாமல் பிரச்சாரப் பேருந்தில் இருந்தபடியேதான் அங்கும் அவர் பேசினார். 

அப்போது, பா.ஜ.க, தி.மு.க. இரண்டு தரப்புகளையும் விஜய் ஒரு பிடிபிடித்தார். 

முன்னதாக, திருச்சியில் பேசுகையில் ஒலிவாங்கி பழுதானதால், அங்கு பேசியதையே சிறிது மீண்டும் பேசினார்.

பா.ஜ.க. பீகாரில் ஓட்டுகளைத் திருடியதாகக் குற்றம்சாட்டியவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என வைத்து பா.ஜ.க. ஒரே தில்லுமுல்லு செய்யப் பார்க்கிறது என்று அவர் சாடினார். இது ஜனநாயகப் படுகொலை என்ற அவர், வட மாநிலங்களில் மட்டும் அதிக தொகுதிகள் கிடைக்கும்படி செய்து தென்மாநிலங்களின் தொகுதியைக் குறைக்கவும் பார்க்கிறது; இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அந்தக் கட்சி செய்யும் துரோகம் என்றும் விஜய் காட்டமாகக் கூறினார்.

ஒன்றிய அரசு செய்வது மோசடி என்றால், மாநில அரசு செய்வது நம்பிக்கை மோசடி; இரண்டுமே ஏமாற்றுவேலைா, ஜனநாயகக் குற்றம்தான்; ஏமாற்றுவதில் பிரதமர், முதலமைச்சர் இருவருமே வல்லவர்கள் என்றும் விஜய் குறிப்பிட்டார்.

மேலும், முதலமைச்சரை அன்புக்குரிய முதலமைச்சர் அவர்களே எனப் பொருள்படும்படி டியர் சிஎம்சார் என்று இன்று விஜய் குறிப்பிட்டது முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் மதுரையில் பேசுகையில் சிஎம் அங்கிள் என விஜய் குறிப்பிட்டது தி.மு.க. தரப்பினரைக் கொந்தளிக்க வைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com