கடலூரில் இன்று, கும்மிடியில் 13இல் விஜய் பிரச்சாரம் ரத்து!

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

த.வெ.க.தலைவர் விஜய்யின் பிரச்சாரத்துக்குதேர்தல்ஆணையம் அளித்தும் அவர்தொடர்ந்து பிரச்சாரத்தைஇரத்துசெய்து வருகிறார். 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி அவர் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு, இல்லை என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இன்று கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரமும் சாலை வலமும் நடத்துவதாக த.வெ.க. சார்பில் அனுமதியும் பெற்றிருந்தனர். ஆனால் எந்தக் காரணமும் சொல்லாமல் அவருடைய நிகழ்ச்சிகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. 

இதைப் போலவே, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கவரப்பேட்டையில் விஜய்யின் பிரச்சாரம் வரும் 13ஆம் தேதி இடம்பெறுவதாக அனுமதியும் பெறப்பட்டு விட்டது. ஆனால் அதுவும் இரத்துசெய்யப்பட்டு வரும் 19ஆம்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இப்படி தொடர்ந்து பிரச்சார நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படுவதால் விஜய்யின் கட்சியினர் சோர்ந்துபோய் உள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com