தமிழ் நாடு

த.வெ.க. தலைவர் விஜய் தலைநகர் சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஏற்கெனவே மனுத்தாக்கலின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் அதன்பிறகு அவர் தொகுதிப் பக்கம் செல்லவே இல்லை.
இந்த நிலையில் திடீரென இன்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அவர் பெரம்பூர் தொகுதிக்குச் சென்றார்.
தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. தேர்தல் பணிமனைக்குச் சென்று கட்சியினருடன் பேசினார்.
அங்கு த.வெ.க.வின் விசில் சின்னத்தைக் கோலமிட்டவர்களுடன் விஜய்யும் இணைந்துகொண்டார்.
பின்னர் அப்பகுதி மக்களிடமும் விஜய் பேசினார்.