சோப்ளாங்கி அரசு... இங்கி பிங்கி பாங்கி- உதயநிதியின் இன்றைய வசனம்!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on: 

இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்துள்ளார்.

”அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் இங்கி பிங்கி பாங்கி போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு டம்மி முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.” என்றும் கடுமையாகச் சாடியுள்ளவர்,

”தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.

மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு எனத் தெரிந்துகொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.

இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.

'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்றும் தன் சமூக ஊடகப் பதிவொன்றில் கூறியுள்ளார்.