மானே தேனே என்ற விஜய்யும் இப்போ கடுதாசிதானே... உலுப்பும் உதயநிதி!

Udhayanidhi stalin
உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் முந்தைய தி.மு.க. அரசு கடிதம் எழுதியதை விமர்சித்த விஜய், இப்போது கடிதம் மட்டும்தானே எழுதுகிறார் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்டுள்ளார். 

”இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இந்த அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த சோபா மாடல் அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.

இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.” என்று உதயநிதியின் சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com