60 ஆயிரம் ஓட்டு, அமைச்சர் பதவி- உதயநிதி டீல்!

திருவையாற்றில் உதயநிதி பிரச்சாரம்
திருவையாற்றில் உதயநிதி பிரச்சாரம்
Published on

துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலையில் தஞ்சை மாவட்டம், திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் துரை சந்திரசேகரனை ஆதரித்து வாக்கு கேட்டார். 

அப்போது, தான் தன்னுடைய தொகுதியில் இதுவரை ஒரு நாள்தான் பிரச்சாரம் செய்திருக்கிறேன்; அதை விட்டுவிட்டு சந்திரசேகரனுக்காக வந்திருக்கிறேன் என்றால் அவருடைய தொகுதிப் பணிகள் அப்படி... எனக் கூறிய உதயநிதி, அவர் தொகுதிக்குச் செய்த பணிகளையும் பட்டியலிட்டார். 

மேலும், தி.மு.க. அரசின் சாதனைத் திட்டங்களைப் பற்றியும் எடுத்துக்கூறி, ”கடந்த முறை  சந்திரசேகரனை 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். இந்த முறை அதைவிட அதிகமாக வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும்... செய்வீர்களா?” எனக் கேட்டார். 

அப்போது, கூட்டத்தினர் மத்தியிலிருந்து அவரை அமைச்சராக ஆக்குவீர்களா என்று கேட்டனர். அதைக் காதில் வாங்கிக்கொண்டவராக,  

”ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசம்” எனக் குறிப்பிட்டவர், “சரி எனக்கும் வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் 60ஆயிரம்... வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால், அண்ணனை அமைச்சராக வலியுறுத்துவேன்” என டீல் செய்துகொண்டார். 

மேலும், அறுபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தால் மாதம் ஒரு முறை தஞ்சைக்கு வருவதாகவும் உதயநிதி வாக்குறுதி அளித்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com