ஆளுநர் உரை- தி.மு.க., அ.தி.மு.க. கருத்து என்ன?

உதயநிதி ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
உதயநிதி ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
Published on

சட்டபேரவையில் ஆளுநர் வாசித்த த.வெ.க. அரசின் உரையைப் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: 

”தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு அளித்த அறிக்கையை கமா, புள்ளிகூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்காக எடுத்துக்கொடுப்பதாக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.

தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம்.”

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

”மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிச்சம்.

ஆளுநர் உரை கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்!”

logo
Andhimazhai
www.andhimazhai.com