மின்வெட்டைச் சரிசெய்யாமல் உளறும் அமைச்சர் - உதயநிதி சாடல்

மின்வெட்டு
மின்வெட்டு
Published on

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வெட்டைச் சரிசெய்யாமல் உளறிக்கொண்டிருக்கிறார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சாடியுள்ளார். 

நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை எனப் பல்வேறு ஊடகச் செய்திகளைப் பட்டியலிட்டு, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் வோல்ட்டேஜ் பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.

மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று உதயநிதி தன் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com