காவல் மரணங்கள்... முதல்வர் விஜய் மௌனம்- உதயநிதி விமர்சனம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - லியோ விஜய்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - லியோ விஜய்Office
Published on

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியுள்ளார்.

”போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.

காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?” என்று அவர் தன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com