மேகதாது, பயிர்க்கடன்... ஒன்னயும் பட்ஜெட்டில் காணோம் - உதயநிதி விமர்சனம்

Udhayanidhi stalin
உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :

இதை பட்ஜெட் என்றழைப்பதைவிட, முதல்வரின் புகழுரை என்று குறிப்பிடலாம்.

வேளாண் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இல்லை. மேகதாது அணைப் பிரச்னை, பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம், குறுவை சாகுபடி செய்யமுடியாத சூழல் போன்ற எத்தனையோ பிரச்னைகள் உள்ளன.

இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் வகையிலும் தி.மு.க.வைச் சேர்ந்த அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்து, எங்கள் எதிர்ப்பை இந்த அரசுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

பழைய திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி, புது திட்டங்களைப் போல அறிவித்துள்ளார்கள்.

தேர்தல் வாக்குறுதியின்போது, 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் கூறினார். ஆனால், அதை நிறைவேற்ற இந்த அரசு தவறிவிட்டது.

இதுகுறித்து கேட்டால் முதல்வர் மெளனமாக இருக்கிறார்." என்று உதயநிதி கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com