தமிழ் நாடு
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 28ஆவது (2023) ஆண்டின் ’புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விட்டல் ராவ் அவர்களுக்கு புனைவிலக்கியம் பிரிவிலும், வைதேகி ஹெர்பர்ட்டுக்கு புனைவிலி இலக்கியம் (மொழிபெயர்ப்பு) பிரிவிலும் விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு இவர்கள் அடங்கிய பட்டியலைப் பரிந்துரை செய்திருந்தது.
அதிலிருந்து 2023 ஆம் ஆண்டின், விருதுக்குரியவர்களாக இவ்விரு எழுத்தாளர்களை விளக்கு செயற்குழு தேர்வு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.