ஓ.பன்னீருடன் தி.மு.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ. சசிகலா கட்சிக்குத் தாவல்!

ஓ.பன்னீருடன் தி.மு.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ. சசிகலா கட்சிக்குத் தாவல்!
Published on

உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, அண்மையில் தி.மு.க.வில் சேர்ந்தார் ஐயப்பன். 

பெரிய அளவில் பன்னீர்செல்வத்துடன் ஆதரவாளர்கள் இணைந்தாலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐயப்பன் இணைந்தது முக்கியத்துவம் பெற்றது. 

அதிரடித் திருப்பமாக இன்று அவர் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க.வில் சேர்ந்தார். சூட்டோடு சூடாக அவரை உசிலம்பட்டி வேட்பாளராகவும் சசிகலா அறிவித்துள்ளார்.   

கட்சி மாறி தி.மு.க.வில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியும், நேற்றுவரை தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என ஐயப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். 

மு.க.ஸ்டாலின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு ஒரே நாளில் ஏன் இந்த முடிவு எனக் கேட்டதற்கு, நேற்றைய பேட்டிக்கே யாரும் செவிசாய்க்கவில்லை; தி.மு.க.வில் அனாதையாகவே இருந்தோம் என்றும் அவர் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com