மோடி முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது- வைகோ

வைகோ
வைகோ
Published on

பா.ஜ.க., பிரதமர் நரேந்திர மோடி முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

”தமிழ்நாடு உட்பட்ட தென்னிந்தியாவை வஞ்சிக்கும் நஞ்சு மனப்பான்மையோடும், தீய குறிக்கோளோடும் நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.கழகத்தின் தலைவர் - தமிழக முதல்வர் ஸ்டாலின் உயர்த்திய போர்க்கொடி வெற்றிக் கொடி ஆகிவிட்டது. பா.ஜ.க. அரசின் கோர முயற்சிகளுக்கு மரண அடி விழுந்துவிட்டது. வாழ்க ஜனநாயகம்!” என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com