வைகோ
வைகோ

கர்நாடகத் துணை முதலமைச்சருக்கு வைகோ கண்டனம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கர்நாடகத் துணை முதலமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளதற்கு வைகோ கண்டனம்தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அக்டோபர் 15 வரை, வினாடிக்கு 3,000 கன அடி வீதம், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட காவ்வேண்டும்” என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக மாநில அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை போய்கொண்டிருப்பதால், காவேரி படுகைப் பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகி நாசமாகிக் கொண்டிருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்த நிலையில்,காவேரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெறுவோம் என்றும் கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் நேற்று தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ள வைகோ, 

”வறட்சி காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுத்து, காவிரியில் கர்நாடகா நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com