வைகோ
வைகோ

வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு! - துரை வைகோ தகவல்

கால் தடுமாறி விழுந்ததில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ம.தி.மு.க. கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக தலைவர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்.

எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு தலைவர் வைகோ உடல் நலம் பெறுவார்.

வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com