தமிழ் நாடு
த.வெ.க. ஆட்சி அமைய ஆதரவா என்பதற்கு அப்படியொரு எண்ணம் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர்.
பின்னர் வெளியே வந்த வைகோவிடம், செய்தியாளர்கள் த.வெ.க. ஆட்சியமைப்பது குறித்து கேட்டனர். அதற்கு அவர் பிடிகொடுக்காமல் பேசினார்.
தி.மு.க. கூட்டணியில் எந்தக் கட்சியும் அதற்கு அசையமாட்டார்கள் என்று திடமாக நம்புவதாக அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியைப் பற்றிக் கேட்டதற்கு, இன்னொரு கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட தனக்கு விருப்பமில்லை எனக் கூறிவிட்டு அவர் நகர்ந்தார்.