வானதி சீனிவாசனுக்குப் பதிலாக மகன்கள் வாக்கு சேகரிப்பு!

வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ்
வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ்
Published on

பா.ஜ.க. மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். சில நாள்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

தொடர் சிகிச்சையில் இருக்கும் அவர், நேற்று படுக்கையில் இருந்தபடியே காணொலி ஒன்றை வெளியிட்டார். இரு நாள்களில் தான் நலமடைந்து பிரச்சாரத்துக்கு வந்துவிடுவதாகவும் தனக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதனிடையே, வானதிக்குப் பதிலாக அவருடைய கட்சியினர் மட்டுமின்றி, அவருடைய மகன்கள்ஆதர்ஷ், கைலாஷ் இருவரும் தாயாருக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மூத்த மகன் ஆதர்ஷ் தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இளைய மகன் கைலாஷ் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் இறங்கினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com