முதல்வர் பிறந்தநாள்: வாழ்த்துமன்றமாக மாறிய சட்டமன்றம்!

CM Vijay
முதல்வர் விஜய்
Published on

தமிழக முதல்வர் விஜய்யின் 52ஆவது பிறந்தநாளை த.வெ.க தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் கோவில்களில் அபிஷேகம், விஷேச பூஜைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

த.வெ.க அமைச்சர்களான அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் முதல்வர் விஜய் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழக மக்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.

முதல்வர் விஜய் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழப் பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரசைச் சேர்ந்த ராகுல் காந்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, வீ தி லீடர் நிறுவனர் அண்ணாமலை, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ஜி.கே.வாசன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் முதலமைச்சருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் பேசிய அனைவருமே முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டுத்தான் பேசியதால் சட்டசபையே இன்று வாழ்த்து சபையாக மாறிவிட்டது!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com