வி.சி.க., முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு!

vanniyarasu
வன்னியரசு, அமைச்சர்
Published on

விஜய் அமைச்சரவை இன்று இரண்டாவது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வன்னியரசும் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பாபநாசம் ஷாஜகானும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன் துறையும் வழங்கப்பட்டுள்ளன.

தலைமைச்செயலகத்தில் இன்று அமைச்சர் வன்னியரசு தன் அறையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com