ஸ்டாலின் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் - திருமாவளவன்

Thol. Thirumavalavan
தொல். திருமாவளவன்
Published on

மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிவருவதாக அமைச்சர் நிர்மல்குமார் மீது தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கிப் பேசிவருகின்றனர். இதில், சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, நிர்மல்குமாரைப் பற்றி பெயர் குறிப்பிடாமல் மோசமாகப் பேசினார் என விஜய் ஆதரவுக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் பண்படுத்தப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட ஓர் இயக்கத்தைச் சேர்ந்த இன்றைய தலைவர்கள் கொச்சையான வார்த்தைகளால், ஈன்றதாயைப் பழிக்கும் இழிசொற்களால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது கவலை அளிக்கிறது. இதுத.வெ.க.வுக்கு எதிராகப் போகும் என்பதைவிடதி.மு.க. வுக்கு எதிராக மக்களிடம் கருத்து பதிவாகும் என்பதை மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என்று கூறியவர்,

இதை அவர் வெளிப்படையாக, பொதுமக்கள் அறிய கண்டிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com