வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருந்தவரை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியதற்காக, டிஐஜி இராஜலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்வந்த செய்தி:
முன்னதாக, ஆயுள் கைதியாக இருந்தவரை வீட்டு வேலைக்குப் பயன்படுத்திய விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் சிறை டிஐஜி இராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று சிறைத் துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் வெளியிட்ட உத்தரவில், வேலூர் சிறையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை, புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருடைய இடத்துக்கு புழல் சிறையிலிருந்து பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.