தமிழ் நாடு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் முதல் முறையாக வேலூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதியன்று இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ்வரை உயரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தலைநகர் சென்னையில் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இன்று திங்கட்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேசமயம், இந்த வானிலை காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானதுவரை மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.