
திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
திமுக பெரியண்ணன் மனநிலையில் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்தச் சூழலில் திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நாங்கள் ஒரு இடத்தை எங்களால் ஏற்க முடியாது என்றும், கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தோம். மேலும், தமிழக மக்களின் நலனுக்கான திமுக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுகிறது.” என்றவர் திமுக பெரியண்ணன் மனநிலையில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.