விஷவண்டு தாக்கி பேராசிரியர் உயிரிழப்பு... ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரிக்கை!

Poisonous insect
கதண்டு
Published on

பண்ருட்டி அருகே களப்பயணத்தின்போது விஷ வண்டு தாக்கியதில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராணிப்பேட்டையில் உள்ள ஆதிபராசக்தி தனியார் கல்லூரியில் வேளாண் டிப்ளமோ பிரிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் 18 மாணவர்களை, 2 உதவிப் பேராசிரியர்கள் கடலூர் மாவட்டம் கோழிப்பாக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு உள்ள வயலில் தேனீ வளர்ப்புக் குறித்து அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள புதரில் இருந்து வெளியேறிய விஷவண்டுகள் அவர்களைத் தாக்கின.

இவை கதண்டு எனப்படும் விஷத் தன்மையுடைய வண்டுகள். பெரிய மரங்கள் அல்லது பாறைகளின் இடுக்குகளில் கூட்டமாக வாழும் இவை தாக்கினால் மனித உடலில் நச்சுத்தன்மை வேகமாகப் பரவி ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இந்த வண்டுகள் தாக்கியதில் மாணவர்கள், உதவிப் பேராசிரியர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கிராம மக்கள் சேர்த்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லும் வழியிலேயே சுரேஷ் என்ற உதவிப் பேராசிரியர் இறந்துவிட்டார்.

உயிரிழந்த வேளாண் பேராசிரியரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று த.வா.க கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com