வேங்கைவயல்
வேங்கைவயல்

வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை!

வேங்கைவயல் மனிதக் கழிவு விவகாரத்தில், 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளது.

4 சிறுவர்கள் உள்பட 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் நான்கு கட்டங்களாக சோதனைக்கு எடுக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள தடயவியல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன், 31 பேரின் டிஎன்ஏக்களும் ஒத்துப்போகவில்லை என்று தெரிய வந்திருப்பதன் மூலம், வழக்கில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் ஓராண்டுக்கு மேல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் தொடங்கிய இடத்திலேயே விசாரணை வந்து நிற்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்து, அதுகுறித்த மனுவை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனா்.

தொடா்ந்து ஒத்திவைக்கப்படும் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது 9 போ் ஆஜராகினா். ஒருவா் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு நீதிபதி எஸ். ஜெயந்தி ஒத்திவைத்தாா்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com