100 ரூபாய்க்கு 10 காய்கறிகள்... வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு!

Vettri special vegetable bag
வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு
Published on: 

தீபாவளிப் பண்டிகையையொட்டி, அன்றாட சமையலுக்குத் தேவையான 10 காய்கறிகளை வழங்கும் வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்புத் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பில் 10 வகையான காய்கறிகள், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் தொகுப்பை தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், கூட்டுறவுப் பண்டக சாலைகளின் விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், சென்னையில் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகளின் மூலமாக வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vettri special vegetable bag
வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு

இந்தத் தொகுப்பில் பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்தச் சிறப்புக் காய்கறித் தொகுப்பு, இன்று முதல் வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram