விஜய் அரசு பெருமிதம்- 100 நாள்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்!

Vettri Tamilnadu investors conclave 2026
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026
Published on

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழ்நாட்டு அரசின் சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு - வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு, 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 67,452 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இதில், 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 5,074 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

மேலும், 2,676 கோடி ரூபாய் முதலீடு, 1,550 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளை அவர் தொடங்கியும் வைத்தார்.

சிப்காட், டிட்கோ, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி ஆகிய நிறுவனங்களின் 777.74 கோடி ரூபாய் செலவிலான 2 திட்டச் செயல்பாடுகள், 13 புதிய கட்டடங்களையும் அவர் திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து, 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com