ஜோடியாக மேடை ஏறிய விஜய் – திரிஷா.. வைரலாகும் வீடியோ!

விஜய் - திரிஷா
விஜய் - திரிஷா
Published on

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், திரிஷாவும் ஒரே காரில் சென்று பங்கேற்றனர்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக திருமணம் நிகழ்வில் பங்கேற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் விஜய் களமிறங்கியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முக்கிய மாவட்டங்களில் மாநாடுகளை நடத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை, நடிகையுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது சர்ச்சையாகியிருந்தது. பின்னர் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யும், திரிஷாவும் சென்னையில் இன்று (மார்ச் 5) நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரே காரில் சென்று பங்கேற்றுள்ளனர்.

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதேபோல், விஜய் ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.

logo
Andhimazhai
www.andhimazhai.com