தமிழ் நாடு

அ.தி.மு.க. உட்பட பல கட்சிகளிலிருந்து விஜய்யின் த.வெ.க.வில் சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு புதியதாகப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தி.மு.க.விலிருந்து சென்ற கலைராஜன், இ.கம்யூ. கட்சியின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் சி.மகேந்திரன் ஆகியோருக்கு த.வெ.க. முதன்மைச் செய்தித்தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க.வின் தலைவர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் ஊடகம்- செய்தித்தொடர்பு அணி விரிவாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.